×

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட 38 பேர் டெபாசிட்

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட இதுவரை 38 பேர் டெபாசிட் செலுத்தி உள்ளனர்.
இலங்கையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நிறைவடைகிறது. இதையடுத்து இலங்கை அதிபருக்கான பொதுதேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே சுயேச்சையாக மீண்டும் போட்டியிடுகிறார். மேலும், ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா, எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய தலைவர் சஜித் பிரேமதாச, சுதந்திர கட்சி தலைவருமான விஜயதாச ராஜபக்சே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுலா கட்சி வேட்பாளராக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். இதனிடையே தேர்தலில் போட்டியிட டெபாசிட் செலுத்துவதற்கான காலஅவகாசம் நேற்று பிற்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இதுவரை 38 வேட்பாளர்கள் டெபாசிட் செலுத்தி உள்ளனர்.

The post இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட 38 பேர் டெபாசிட் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Presidential Election ,Colombo ,Lankan presidential election ,President ,Ranil Wickrama Singh ,Sri Lanka ,General Election ,of Sri Lanka ,Dinakaran ,
× RELATED கொழும்பு துறைமுக புதிய முனைய...