×
Saravana Stores

2024ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புலன் விசாரணை பணியில் மிக சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல் துறை அதிகாரிகள் 2024ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
அதன் விவரம்:
1. கி.புனிதா (காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், வேலூர் மாவட்டம்)
2. து.வினோத்குமார் (காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சென்னை)
3. ச.சௌமியா (காவல் துணை கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்க பிரிவு, கடலூர் மாவட்டம்)
4. ஐ.சொர்ணவள்ளி (காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம், திருப்பூர் மாநகரம்)
5. நா.பார்வதி (காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்)
6. பெ.ராதா (காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருப்பூர்)
7. செ.புகழேந்தி கணேஷ் (காவல் துணை கண்காணிப்பாளர், செங்கல்பட்டு உட்கோட்டம், செங்கல்பட்டு மாவட்டம்)
8. இரா.தெய்வராணி (காவல் ஆய்வாளர், பெருந்துறை காவல் வட்டம், ஈரோடு மாவட்டம்)
9. ஆ.அன்பரசி (காவல் ஆய்வாளர், பொன்னை காவல் நிலையம், வேலுார் மாவட்டம்)
10. நா.சுரேஷ், துணை காவல் கண்காணிப்பாளர், ஊரக உட்கோட்டம், தூத்துக்குடி மாவட்டம்)

இதேபோன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2024ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி அவர்களது பணியை பாராட்டி சிறந்த பொதுச்சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும்.
அதன் விவரம்:
1. தா.ச.அன்பு (காவல் துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை)
2. இ.கார்த்திக் (காவல் கண்காணிப்பாளர்-I, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை)
3. சி.ர.பூபதிராஜன் (துணை காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்பபுலனாய்வு துறை, சேலம் சரகம்)
4. க.சீனிவாசன் (காவல் ஆய்வாளர் (தொ.நு.), காவல் தொலைத்தொடர்பு பிரிவு, சென்னை)
5. பு.வ.முபைதுல்லாஹ் (காவல் உதவி ஆய்வாளர், உள்வட்ட பாதுகாப்பு பிரிவு, அயல்பணி திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு, தலைமையகம், சென்னை) விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 2024ம் ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Independence Day 2024 ,Government ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Independence Day ,
× RELATED பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய (Notifiable Disease) நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு!