- 77வது சுதந்திர தினம்
- 78 வது சுதந்திர தினம்
- சென்னை
- இந்தியா
- சுதந்திர
- சுதந்திர தினம்
- பிரிட்டிஷ்
- தின மலர்
சென்னை: இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து நீடிக்கும் குழப்பம், ‘இது எத்தனையாவது சுதந்திர தினம்?’ என்பதே. இந்த குழப்பத்திற்கான காரணமும், அதற்கான பதிலையும் விரிவாக பார்க்கலாம்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து நமக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்தது. இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இந்நாளில் நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்கிறோம். அன்றைய தினத்தில் நமது மூவர்ணக் கொடியை ஏற்றி தேசிய கீதம் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
அதன்படி இந்தாண்டு நாளை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். அதேநேரம் இது 77வது சுதந்திர தினமா? அல்லது 78வது சுதந்திர தினமா? என்று கேள்வி எழும். இதற்கான பதில்;
1947ல் சுதந்திரம் பெற்று இதுவரை 77 ஆண்டுகள் ஆகிறது என்பதால் நாளை கொண்டாட இருப்பதை 77வது சுதந்திர தினம் எனக் குறிப்பிடலாமா? என்றால் கூடாது என்பதே பதில். ஏனெனில், நாம் சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15ம் தேதியே முதல் சுதந்திர தினமாக பதிவாகியுள்ளது. எனவே, அதற்கு அடுத்த 1948ம் ஆண்டு நாம் 2வது சுதந்திர தினமாக கொண்டாடினோம். அப்படி பார்க்கையில், நாளைய தினம் 78வது சுதந்திர தினமாக கணக்கிடப்படுகிறது. இந்தாண்டு அரசு தரப்பில் வெளியாகும் அனைத்து செய்திக்குறிப்புகளிலும் கூட 78வது சுதந்திர தினம் என்றே கூறப்பட்டுள்ளது.
The post நாளை கொண்டாடுவது 77வது சுதந்திர தினமா?.. இல்லை 78வது சுதந்திர தினமா?: குழப்பத்திற்கான பதில்..!! appeared first on Dinakaran.