நன்றி குங்குமம் டாக்டர்
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. வாசனைப் பொருட்கள் தயாரிக்க இது பயன்படுத்தப்படுகிறது சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும்..இது மருத்துவக் குணம் நிறைந்தது. அனைத்து வகையான தேமல் நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும். கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும். புரையோடிய புண்களை கூட இந்த மஞ்சள் எளிதாக குணப்படுத்துகிறது. மேக நோய்களையும் சிறந்த முறையில் குணப்படுத்துகிறது.
கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது கருந்துளசியை மையாக அரைத்து உடலில் தேய்த்து ஊறவிட்டுபின் வெந்நீரில்குளிக்கநீண்டகாலமாககுணமாகாத சொறி, சிரங்கு ஆகியவைவிரைவில்குணமாகும்.கஸ்தூரி மஞ்சள் சளியை கரைக்கும் தன்மையுடையது. உடல் வளர்ச்சிக்கும் இது சிறந்த முறையில் பயன்படுகிறது.கஸ்தூரி மஞ்சளை உடலில் தேய்த்து குளித்து வர வேர்வை வாடை நீங்கி உடலில் மணம் கமழும்.உடல் வளர்ச்சி சீராகும்.உடல் வனப்பு அதிகரிக்கும்.உடல் நல்ல நிறமாகவும் உடலுக்கு புத்துணர்ச்சியும் ஏற்படும்.ஆண்மைகுறைவை நீக்குவதற்கான அனைத்து வகையான மருந்துகளிலும் கஸ்தூரி மஞ்சள் சேர்க்கப்படுகிறது.
பாலை சுண்டக்காய்ச்சி அதனுடன் கஸ்தூரி மஞ்சள், மிளகுத்தூள் சர்க்கரையும் சேர்த்து அருந்திட பாலின் சுவையும் மணமும் அதிகரிப்பதுடன் ஜலதோஷம் நீங்கும்.கஸ்தூரி மஞ்சளின் இலைச்சாறு கிராந்தி புண், கரப்பான், தலைநோய், வீக்கம், வலிகள் ஆகியவற்றை குணப்படுத்தும்.கஸ்தூரி மஞ்சளைகுழந்தைகளின் உடலில்தேய்த்துகுளிப்பாட்டிட அவர்கள் ஆரோக்கியம் மேம்படும்.
பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும். தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லதுகுழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.
தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்
The post கஸ்தூரி மஞ்சளின் மருத்துவக் குணங்கள்! appeared first on Dinakaran.