×

வெறிநாய் கடிக்கு 4வயது சிறுவன் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே 4வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி உயரிழந்தான். கடந்த ஜூன் 27ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நிர்மலை வெறிநாய் கடித்தது. ரேபிஸ் நோய் தாக்கிய நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் ரேபிஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்து சிறுவன் நிர்மல் உயிரிழந்தான். சிறுவனின் உடல் அமரர் ஊர்தியில் இரவில் வீட்டுக்கு எடுத்து வராமல் நேரடியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டது

The post வெறிநாய் கடிக்கு 4வயது சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ranipettai ,Arakkonam ,Chengalpattu Government Hospital ,
× RELATED பஸ் படியில் தொங்கியபடி மாணவர்கள்...