நீடாமங்கலம், ஆக. 14: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் லாபம் தரும் புறக்கடையில் கோழி வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது.
இதில் தொழில்நுட்ப வல்லுநர்கள் சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர். இப்ப பயிற்சியில் நல்ல நாட்டுக்கோழி ரகங்களை தேர்வு செய்தல், கோழிகளுக்கான கொட்டகை அமைத்தல், தீவனம் திட்டமிடுதல், இளங்குஞ்சுகள் பராமரிப்பு, வளர்கோழி மற்றும் முட்டை கோழி பராமரிப்பு, கோழி பண்ணை உபகரணங்கள், நாட்டுக்கோழிகளை சந்தைப்படுத்துதல், நாட்டுக்கோழி சம்பந்தமான அரசு நலத்திட்டங்கள், கடன் உதவி திட்டங்கள், அரசு மானிய கடன் உதவி திட்டங்கள், மலிவு விலை கோழி தீவன தயாரிப்பு உத்திகள், பரண்மேல் வளர்த்தல், கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் அதன் தடுப்புமுறைகள் பற்றி விரிவாக பயிற்று விற்கப்படும்.
இப்பபயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்கள் 9363386548, 7373963899, 9698618093 ஆகும்.
The post நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி வரும் 16ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.