×

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஆக. 14: மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சாக்ரடீஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசாணை 33ல் உரிய திருத்தம் மேற்கொண்டு கிராம உதவியாளர்களுக்கு மீண்டும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும்.

வருவாய்துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் கல்வி தகுதி அடிப்படையில் இளநிலை உதவியாளர், ஊர்தி ஓட்டுனர், குருவட்ட அளவர் போன்ற பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் கிராம உதவியாளருக்கு 25 சதவீதம் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசின் பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தாலுகாக்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.

The post ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : revenue department ,Madurai ,Tamil Nadu Revenue Department Village Assistants' Association ,Madurai District Collector ,Socrates ,Revenue Department Village Assistants Association ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்