ஈரோடு, ஆக. 14: ஈரோடு மாவட்டத்தில் பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேளாண் இணை இயக்குநர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காசோளம், எள், காய்கறி, வாழை, மரவள்ளி ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 5,999 டன், டி.ஏ.பி., 1,423 டன், பொட்டாஷ், 2,364 டன், காம்ப்ளக்ஸ் உரம் 15,601 டன், சூப்பர் பாஸ்பேட் 1,116 டன் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதுடன், ஈரோடு, திண்டலில் உள்ள வேளாண் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து, அதில் பரிந்துரைக்கப்படும்படி உரங்களை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், உரச்செலவு குறைவதுடன், மண் வளம் காக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post பாசனங்களுக்கு தண்ணீர் திறப்பு: விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு appeared first on Dinakaran.