- மாவட்ட அபிவிருத்தி
- கிராம அபிவிருத்தி திணைக்களம்
- அரியலூர்
- போக்குவரத்து அமைச்சர்
- எஸ்சி சிவசங்கர்
- தமிழ்நாடு அரசு
- அரியலூர் மாவட்டம். ...
- ஊரக வளர்ச்சி வாகனம்
- வளர்ச்சி
- தின மலர்
அரியலூர்,ஆக.14: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அரியலூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.75.72 லட்சம் மதிப்பிலான 8 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்குதல், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் களப்பணியில் ஈடுபடும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.75.72 லட்சம் மதிப்பிலான 8 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட கலெக்டர் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை அலுவலர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் கவிதா, திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், நகர் மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகர செயலாளர் முருகேசன், நகர பொருளாளர் ராஜேந்திரன் , திமுக மாவட்ட துணைச் செயலாளர் அருங்கல் சந்திரசேகர் , திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அசோக் சக்ரவர்த்தி திமுக மாவட்ட விளையாட்டு மேம்பட்டனை அமைப்பாளர் அருண் ராஜா, மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன் , மதிமுக ஒன்றிய செயலாளர் சங்கர், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஊரக வளர்ச்சி அலுவலக மேலாளர் அகிலா மாணிக்க விநாயகம், திருமானூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி அசோக் சக்கரவர்த்தி , மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அம்மாபாளையத் தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர் விடுதியில் மாணவர்கள் தங்கும்அறைகள், சமையற்கூடங்கள், உணவு பட்டியலின் படி உணவு தயார் செய்யப்பட்டு வருகிறதா என மாவட்டக் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதியின் முன்பு காலியாக உள்ள பகுதியில் மாணவர்களுக்கு விளையாட்டு மையம் அமைத்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
The post ஊரக வளர்ச்சி துறை சார்பில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வாகனம் appeared first on Dinakaran.