- டாஸ்மாக்
- சுதந்திர தினம்
- காஞ்சிபுரம்
- மாவட்டம்
- கலெக்டர்
- கலாச்செல்வி மோகன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டாஸ்மாக் கடைகள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் கீழ்கண்ட நாளில்நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 15ம்தேதி (15.8.2024) சுதந்திர தின நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்கள்) ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல் appeared first on Dinakaran.