×

அண்ணாமலையிடம் சீட்டு வாங்கி பாஜக தலைமையை ஏற்கணும்னா நாண்டுக்கிட்டு செத்துவிடுவோம்: செல்லூர் ராஜூ

வாடிப்பட்டி: அண்ணாமலையிடம் சீட்டு வாங்கி பாஜக தலைமையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டால், நாண்டுக்கிட்டு (தூக்குபோட்டு) செத்துவிடுவோம் என அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக கூறினார். மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே, பரவை கிராமத்தில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நேற்றிரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். அவரை எனக்கு எப்பவுமே பிடிக்காது, அவர் ஒரு தறுதலை.

நாங்கள் ஏதோ அவரிடம் கூட்டணிக்கு சென்ற மாதிரி பேசுகிறார். இனி அதிமுக தலைமைக்கு நாங்கள் விரும்பவில்லை என்கிறார். அண்ணாமலையிடம் சீட்டு வாங்கி பாஜக தலைமை ஏற்க வேண்டிய நிலை வந்தால், நாங்கள் நாண்டுக்கிட்டு (தூக்கிட்டு) செத்து விடுவோம். அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது. 70 ஆண்டு கால திராவிட ஆட்சியை குறை கூறுகிறார். மத்தியில் ஆளுகின்ற மமதையில் வாய்க்கொழுப்புடன் அண்ணாமலை பேசுகிறார். இப்படி பேசி பேசியே மத்தியில் தனிப்பெருமான்மையுடன் இருந்த பாரதிய ஜனதா தற்போது மைனாரிட்டி அரசாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அண்ணாமலை போன்ற தலைவர்கள் தான். இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

The post அண்ணாமலையிடம் சீட்டு வாங்கி பாஜக தலைமையை ஏற்கணும்னா நாண்டுக்கிட்டு செத்துவிடுவோம்: செல்லூர் ராஜூ appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Sellur Raju ,Vadipatti ,Former ,AIADMK ,minister ,Paravai ,Samayanallur, Madurai district ,
× RELATED ஆடுகள் பாடம் படிக்கும் வீடியோ...