×

இடுப்பு வலி, முதுகு வலி நீங்க…

நன்றி குங்குமம் தோழி

*இருக்கையில் அமரும் போது நிமிர்ந்து அமர வேண்டும்.

*படுக்கும் போது பெரிய தலையணையை தவிர்த்து குழந்தைகளுக்கு பயன்படுத்துவது ேபான்ற மெலிதான தட்டையான தலையணை சிறந்தது.

*குப்புறப்படுத்தல் கூடாது.

*தேங்காய் நார் மெத்தையே உகந்தது.

*மெத்தையின் கீழே ஸ்பிரிங் கட்டில் ஆகாது.

*நடைப்பயிற்சி முக்கியம்.

*நின்றல், நடத்தல், அமர்தல் என்று எதுவுமே நீண்ட நேரம் கூடாது.

*பயிற்சிக்காகவோ, பஸ் வரவில்லையென்றோ நீண்ட தூரம் நடத்தலை தவிருங்கள்.

*நண்பர்களோடு அரட்டையடித்தபடி வெகு நேரம் நிற்காதீர்கள்.

*தியேட்டரிலோ, வீட்டிலோ முழுப்படமும் பார்த்துவிட்டுத்தான் எழுவேன் என்று அடம் பிடிக்காதீர்கள். இடையிடையே ஓய்வு எடுத்துப் பின்னர் தொடருங்கள்.

*அவசரப்படாமல், பொறுமையாக, நிதானமாக எதையும் செய்யுங்கள். குனிதல், நிமிர்தல், எழுந்து கொள்ளல், கை, கால் அசைத்தல் யாவுமே நிதானமாக செய்வது அவசியம்.

– விசாலாட்சி கண்ணன், ஓசூர்.

The post இடுப்பு வலி, முதுகு வலி நீங்க… appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இனி கல் தொடாது கை!