- மோடி
- K.Balakrishnan
- Thiruvilliputhur
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்
- பாலகிருஷ்ணன்
- கே.பாலகிருஷ்ணன் சந்தேகம்
திருவில்லிபுத்தூர்: வீடற்ற மக்களுக்கு, அரசு சார்பில் வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில மாநாடு நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் பெரும்பாலான ஏழைகளுக்கு வீடு இல்லை. அவர்களுக்கு வசிப்பிடத்தை உறுதி செய்து, அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை பெறும் நபர்களின் வீட்டில் உள்ள பெண்களும் தங்களது உரிமை தொகையை பெறலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தேசிய அளவில் பங்குச்சந்தையில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். பங்குச் சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்பு கூட, இந்த விவகாரத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என ஒதுங்குவது கண்டித்தக்கது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மேற்கொள்ள பிரதமர் அனுமதிக்க வேண்டும். ஆனால், அவர் அனுமதிக்க மறுக்கிறார். இதைப் பார்க்கும்போது, அவரும் இந்த விசாரணை வளையத்தில் வந்து விடுவார் என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, பொதுமக்களுக்கான முதலீட்டு பாதுகாப்பை உறுதி செய்ய, ஒன்றிய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பங்கு சந்தை முறைகேட்டில் பிரதமர் மோடிக்கும் பங்கு? கே.பாலகிருஷ்ணன் சந்தேகம் appeared first on Dinakaran.