×

நியூட்ரினோ திட்டம்: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் கிளை அவகாசம்

மதுரை: தேனி நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட்டதா என்பது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட்டதா என நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு கேள்வி எழுப்பியது. தேனி பொட்டிபுரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி வைகோ ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு கால அவகாசம் வழங்கி வழக்கை ஆக.20-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post நியூட்ரினோ திட்டம்: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் கிளை அவகாசம் appeared first on Dinakaran.

Tags : iCourt ,Union Government ,Madurai ,High Court ,EU government ,Theni ,Victoria Kauri ,Dinakaran ,
× RELATED கல்லீரல் அறுவை சிகிச்சை கட்டமைப்பு: ஐகோர்ட் கிளை கேள்வி