×

ஒரு வாரத்தில் உப்பு உற்பத்தி தொடக்கம்: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் மும்முரம்!!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் துவங்கியிருக்கின்றன. தூத்துக்குடிக்கு அடுத்து உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2 ஆம் இடம்  வகிக்கிறது. இத்தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 18,000- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினெல்வயல் ஆகிய பகுதிகளில் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். வடகிழக்கு பருவமழைக்குப் பிறகு மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கியிருக்கிறது. அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்திக்கான முதற்கட்ட பணிகள் துவங்கியிருக்கின்றன. உப்பளப்பாத்திகளை சரிசெய்து உப்பெயடுப்பதற்கேதுவாக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆண்டிற்கான உப்பு உற்பத்தி தொடங்கும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.      …

The post ஒரு வாரத்தில் உப்பு உற்பத்தி தொடக்கம்: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் மும்முரம்!!! appeared first on Dinakaran.

Tags : Vedarany ,Nagai ,Vedaranya ,Nagai district ,Vedaranyam 2 ,Thoothukudi ,Vedaranyam ,Dinakaran ,
× RELATED துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி...