டெல்லி: பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் உத்தரவாதம் அளித்த நிலையில், உத்தரவாதத்தை ஏற்று உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு முடித்து வைத்து உத்தரவிட்டது. பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் இந்த வழக்கிற்காக 3 முறை நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
The post பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.