×

அதானி குழுமம்மீது குற்றச்சாட்டு-சிபிஐ விசாரணை தேவை

டெல்லி: அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணை தேவை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.  அதானி குழுமம் தனது லாபத்தை பொய்யாக உயர்த்திக் காட்டி பங்குச் சந்தையில் ஆதாயம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டை சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் செபி விசாரணை நடத்தினால் உண்மை கண்டிப்பாக வெளியே வராது எனவும் கூறினார்.

The post அதானி குழுமம்மீது குற்றச்சாட்டு-சிபிஐ விசாரணை தேவை appeared first on Dinakaran.

Tags : Adani Group ,CBI ,New Delhi ,Congress ,Adani Group Allegation Special Investigation Committee ,Dinakaran ,
× RELATED அதானி குழும முறைகேட்டில் செபி...