×

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

 

இளையான்குடி, ஆக.13: சாலைக்கிராமம் அருகே சூரானத்தில் நேற்று, மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர் நித்யா கமல் வரவேற்றார். முகாமினை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி தொடங்கி வைத்தார். உதவி திட்ட இயக்குனர் இளங்கோ, ஒன்றியக் குழு தலைவர் முனியாண்டி, தாசில்தார் முருகன், ஆணையாளர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் குடிமைப் பொருள், மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம், சூரானம், ஆக்கவயல், நானாமடை, கலங்காதான் கோட்டை, உதயனூர், துகவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.  இதில் முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன், ஒன்றியச் செயலாளர் தமிழ்மாறன், கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Minister Project ,Ilayayankudi ,Suranam ,Saaligramam ,Panchayat ,president ,Nithya Kamal ,Tamilarasi ,Assistant Program Director ,Ilango ,Chief Minister ,Project Camp ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா