×

அரசியல் களத்திற்கு தயாராகும் விஜய்?.. நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு

சென்னை; நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார். மேலும் அந்த இயக்கத்திற்கு புஸ்ஸி என்.ஆனந்தை பொதுச்செயலாளராகவும் நியமித்திருக்கிறார். நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு நலத் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகின்றனர். அத்துடன் கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டு சில இடங்களில் அந்த மக்கள் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி அடைந்தனர். அவர்களை நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி செயல்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கினார். இதனிடையே அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மக்கள் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தொகுதி வாரியாக அரசியல் விவரங்களை நடிகர் விஜய் கேட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. தங்களது சட்டமன்ற தொகுதியில் உள்ள முக்கிய அரசியல் மற்றும் தொழிலதிபர்களின் விவரங்கள், வாக்காளர் எண்ணிக்கை, கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் விவரங்களை மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் கேட்டுள்ளார். விஜய் இந்த நடவடிக்கைகள் அவர் அரசியலில் ஈடுபடப்போவதை தான் கூறுகிறது என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென் தமிழகத்தில் நடத்த விரும்புவதாகவும், மாநாடு போல் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post அரசியல் களத்திற்கு தயாராகும் விஜய்?.. நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay ,Chennai ,Vijay People's Movement ,Bussi ,N. Anand ,Kollywood Images ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...