×
Saravana Stores

வெளியுறவு கொள்கை தோல்வி: அகிலேஷ் யாதவ் விமர்சனம்

லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வங்கதேசம் மற்றும் இந்தியா என நாட்டின் பெயரை குறிப்பிடாமல் வெளியுறவு கொள்கை தோல்வி குறித்து தனது எக்ஸ் தள பதிவில் விவரித்துள்ளார். இதில் நாட்டின் வெளியுறவு கொள்கை தோல்வியடைந்துள்ளது.

குறிப்பாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், மற்றொரு நாட்டின் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி தனது சொந்த நாட்டின் அரசியல் திட்டங்களை நிறைவேற்றும் எந்தவொரு சக்தியும் நாட்டின் உள்ளேயும் மற்றும் வெளியேயும் பலவீனப்படுத்துகிறது என்பதை வரலாறு கற்பிக்கிறது. குடிமக்களை பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டின் கடமையாகும். எந்தவொரு நாடும் பாகுபாடு இல்லாமல் ஒவ்வொரு குடிமக்களையும், அண்டை நாட்டினரையும் பாதுகாப்பது ஒவ்வொரு நாகரீக சமுதாயத்தின் மனிதாபிமான கடமையாகும்.

எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் ஒருதலைப்பட்சமாக தலையிடுவது உலகளாவிய நாடுகளுக்கு இடையிலான தரநிலைகளின்படி பொருத்தமானதாக கருதப்படாது. ஆனால் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தைரியமான நடவடிக்கைகளை ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வெளியுறவு கொள்கை தோல்வி: அகிலேஷ் யாதவ் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Akilesh Yadav ,Lucknow ,Samajwadi Party ,Bangladesh ,India ,
× RELATED ஆடைகளால் ஒருவர் யோகியாக முடியாது: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு