×

மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரை அடக்கம் செய்ய ஆற்றில் இறங்கி சென்ற கிராம மக்கள்

பந்தலூர் :  பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி படச்சேரி பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் படச்சேரி பாலம் முதல் ஆதிவாசி காலனி வரை செல்லும் பகுதியில் உள்ள ஆற்றின் குறுக்கே பாலம் மற்றும் நடைபாதை இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆற்றின் குறுக்கே மரத்துண்டுகளை வைத்து பாலம் அமைத்து ஆற்றை கடந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழைக்கு மரப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் மேலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆற்றை கடந்து மயானத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் இறந்தவர்களை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அப்பகுதியில் இறந்தவர் ஒருவரை பொதுமக்கள் தங்கள் தோளில் சுமந்து  கொண்டு அடக்கம் செய்வதற்கு ஆற்றில் இறங்கி சென்றனர். எனவே, மக்களின் நலன் கருதி அப்பகுதியில் ஆற்றின் குறுக்கே பாலம் மற்றும் நடைபாதை அமைத்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவரை அடக்கம் செய்ய ஆற்றில் இறங்கி சென்ற கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Serangode panchayat Patachery ,Padachery ,Dinakaran ,
× RELATED பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைத்தும் பயனில்லை