- முன்னாள் அமைச்சர்
- சுயவிவரம்
- சன்முகம்
- சென்னை
- முதல் அமைச்சர்
- கேசி
- ஸ்டாலின்
- வி. சன்முகம்
- திமுக பிரமுகர்
- திண்டிவனம் காவல் நிலையம்
- வி. சன்முகம்
- சண்முகம்
- தின மலர்
சென்னை: 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில், திண்டிவனம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன இைத ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜரானார். வாதங்களைகேட்ட நீதிபதி, சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான். நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
The post முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.