×

அதிகம் பார்வையாளர்களை கவர மயில்கறி சமையல் வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது

திருமலை: தெலங்கானா மாநிலம், சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரனய்குமார்(40). யூடியூபரான இவர், மயில் இறைச்சியை சமைப்பது எப்படி? என்ற வீடியோவை அண்மையில் பதிவிட்டார். இது சர்ச்சையானதும் இதையடுத்து பிரனய்குமார் அந்த வீடியோவை அகற்றிவிட்டார். இந்நிலையில், நம்நாட்டின் தேசிய பறவையை சட்டவிரோதமாக கொல்லும் வீடியோக்களை பகிர்ந்ததற்காக பிரனய்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்றுமுன்தினம் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது: அவரது வீட்டிற்கு சென்று பார்த்தோம். அங்கு சிக்கன் சமைத்து சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தது. எஞ்சியிருந்த இறைச்சியை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். அது உண்மையிலேயே மயில் கறியா அல்லது சிக்கனா என்பதை உறுதி செய்யப்படும். அது சிக்கனாக இருந்தால் அவர் மீது ஏமாற்றுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீசில் ஒப்படைக்கப்படும். மயில் கறியாக இருந்தால் வனத்துறை சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பறவையான மயில் படத்தை வைத்து பதிவு செய்தால் நிறைய பேர் யூடியூபை பார்பார்கள் என்பதற்காக அவர் சிக்கன் கறியை சமைத்து போட்டோவில் மயில் வைத்துபெயரை மட்டும் பதிவு செய்வதாக கூறுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

* ‘கிராபிக்ஸ் மயில்தான் உண்மையானது கிடையாது’
கைது செய்யப்பட்ட பிரணய்குமார் கூறுகையில், ‘நான் சிக்கன் கறி சமைத்து வியூவர்ஸ் அதிகமாக வேண்டும் என்பதற்காக மயில் கறி என்று வைத்தேன். ஆனால் சிலர் அது மயில் கறி தான் என்று கூறுகிறார்கள். அதிகாரிகள் நான் சமைத்த சிக்கனை கொண்டு வந்துள்ளனர். சோதனையில் அது மயில் கறி என்றால் அதற்கு உண்டான தண்டனையை ஏற்க நான் தயார். மயிலை கிராபிக்ஸ் மூலமாக நான் கையில் வைத்திருப்பதுபோன்று வடிவமைத்து யூடியூபில் அப்லோட் செய்தேன். நேற்றுமாலை யூடியூபில் பதிவு செய்த நிலையில் அதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் அதனை டெலிட் செய்துவிட்டேன்’ என்றார்.

The post அதிகம் பார்வையாளர்களை கவர மயில்கறி சமையல் வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Pranaykumar ,Sirisilla District, Telangana State ,
× RELATED கை, கால்களை கட்டிப்போட்டு கொடூரம்; 28...