×

விடுதலை ஓடிடி வெர்ஷனில் சேர்க்கப்படும் கூடுதல் காட்சிகள்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: புதிய காட்சிகளுடன் விடுதலை படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை (viduthalai) திரைப்படம் கடந்த மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்திற்கு பின் வெளிவரவிருக்கும் திரைப்படம் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப் படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இளைராஜா இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டை பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படம் தெலுங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்போது விடுதலை 2ம் பாகத்திற்காக சில காட்சிகளை ஷூட்டிங் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் விரைவில் ஒடிடியில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் நேரம் கருதி குறைக்கப்பட்ட காட்சிகள், ஓடிடியில் வெளியிடப்படும்போது இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் குறித்து வந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும், சுமார் 20 நிமிட கூடுதல் காட்சிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post விடுதலை ஓடிடி வெர்ஷனில் சேர்க்கப்படும் கூடுதல் காட்சிகள்?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Vethimaran ,Vetrimaaran ,Asuran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...