×

ஹாக்கி போட்டியில் வென்ற அணிக்கு பாராட்டு

 

திண்டுக்கல், ஆக. 12: திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்படும் ‘அ’ குறு வட்ட அளவிலான குழு போட்டி மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாணவர் மற்றும் மாணவிகள் என இரண்டு பிரிவுகளின் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாளும் ஹாக்கி, கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, ஹேண்ட் பால்,ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் என 19 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.

நேற்று 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில், முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி அணி , புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிக்கு மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை காஜா மைதீன் பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் சகாயமேரி, பயிற்சியாளர்கள் சதீஷ் கண்ணா, பார்த்தசாரதி, ஞானகுரு, சாதிக் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

The post ஹாக்கி போட்டியில் வென்ற அணிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Dindigul, Aga ,Dindigul Annamalaiyar ,Women's Secondary School ,Dinakaran ,
× RELATED சென்னை அசோக் நகர் அரசு மகளிர்...