திருத்தணி, ஆக. 12: ஆடிமாத கடைசி ஞாயிற்றுகிழமை என்பதால் திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயிலில் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருத்தணிக்கு வருகை தந்தனர். இதனால் மலைக்கோயில் மாடவீதிகளில் பக்தர்கள் நிரம்பி காணப்பட்டனர்.
இதில் சுமார் 3 மணி நேரம் பொதுவழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இதில், காலை முதல் மாலை வரை தொடந்து பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தடையின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதேபோல் ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி பல்வேறு அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
The post திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.