நாகப்பட்டினம்: சிலம்ப போட்டியில் பங்கேற்க திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் 45 மாணவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேளாங்கண்ணிக்கு சென்றனர். இதில் 13 மாணவர்கள் பயிற்சியாளருக்கு தெரியாமல் நேற்று கடலுக்கு சென்று குளித்தனர். இதில் 3 பேர் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். அப்பகுதியினர் அவர்களை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த விஷ்வா (11), வீரமலை (13) ஆகியோர் உயிரிழந்தனர்.
The post வேளாங்கண்ணி கடலில் மூழ்கி2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.