×
Saravana Stores

இந்தியா தொடர்பான கொள்கையில் மாற்றம்: மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவர் வரவேற்பு

மாலே: மாலத்தீவு அதிபராக உள்ள முகமது முய்சு இந்தியாவுக்கு எதிராகவும் சீனாவுக்கும் ஆதரவாகவும் செயல்பட்டு வந்தார். நேற்றுமுன்தினம் மாலத்தீவுக்கு சென்ற ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அந்த நாட்டின் அதிபர் முய்சு, எதிர்க்கட்சி தலைவர் அப்துல்லா ஷாகித் உட்பட பல தலைவர்களை சந்தித்து பேசினார்.

ஜெய்சங்கருடன் நடந்த சந்திப்பில் முய்சு பேசுகையில்,‘‘ மாலத்தீவின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் தமது அரசு உறுதி பூண்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஷாகித் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில்,ஆரம்பத்தில் மாலத்தீவில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்ற நிலையை கடைப்பிடித்த அரசு தற்போது இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். இது தற்காலிகமானதாக இருக்கக்கூடாது என்றும் நாட்டு மக்களின் நலன்களுக்காக நீண்ட காலம் நீடிக்க வேண்டும்’’ என்றார்.

The post இந்தியா தொடர்பான கொள்கையில் மாற்றம்: மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவர் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : India ,Maldives ,President of ,Mohammed Muisu ,China ,Union External Affairs Minister ,Jaishankar ,President ,Muisu ,Abdullah Shahid ,
× RELATED ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு