×
Saravana Stores

சிதம்பரம் அருகே ராட்சத முதலை பிடிபட்டது: பொதுமக்கள் நிம்மதி

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூர், பழைய நல்லூர், அகரநல்லூர், வல்லம்படுகை, வேலக்குடி, வையூர், கண்டியாமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளை ஒட்டியபடி பழைய கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. குறிப்பாக சில ஆண்டுகளாகவே பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க செல்லும் பொதுமக்களை முதலைகள் கடித்து இழுத்து சென்று கொன்று வருகின்றன.
இந்நிலையில் காட்டுக்கூடலூர் கிராமத்தில் அவ்வப்போது கிராம மக்களை மிரட்டி வந்த சுமார் 400 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட முதலை நேற்று கரையில் படுத்திருந்தது. அப்போது அந்த பக்கமாக சென்ற சிறுமி ஒருவர், இதை பார்த்து கூச்சலிட்டார்.

உடனடியாக அங்கு திரண்ட கிராம மக்கள், கரையில் படுத்திருந்த முதலையை பிடித்தனர். பின்னர் முதலையின் கால்கள் மற்றும் வாயை கட்டி தோளில் தூக்கி சென்று, பின்னர் மினிவேன் மூலம் கொண்டு சென்று வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். நீண்ட காலமாக பொதுமக்களை கொன்றும், மிரட்டியும் வந்த முதலையை பிடித்த சந்தோஷத்தில் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். பிடிபட்ட முதலை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் விடப்பட்டது.

 

The post சிதம்பரம் அருகே ராட்சத முதலை பிடிபட்டது: பொதுமக்கள் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Old Kollid River ,Kattakudalur ,Old Nallur ,Akaranallur ,Vallampadugai ,Velakudi ,Vayur ,Kandiamedu ,Cuddalore ,Dinakaran ,
× RELATED பலகாரம் செய்தபோது கொதிக்கும்...