×
Saravana Stores

குளிர்பானம் குடித்த சிறுமி பலி

செய்யாறு: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா கனிகிளிப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (41), விவசாயி, இவரது மகள் கவிஸ்ரீ(5), நேற்று காலை 9.30 மணி அளவில் வீட்டில் வாங்கி வைத்திருந்த குளிர்பானத்தை குடித்திருக்கிறாள். சிறிது நேரத்தில் மூச்சு திணறி மூக்கிலும், வாயிலும் நுரை வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி கவிஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். இது குறித்து தூசி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குளிர்பானம் குடித்த சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : Seyyar ,Rajkumar ,Kaniclipi ,Vembakkam taluk ,Kavishree ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக...