- தூத்துக்குடி
- பொம்மையபுரம்
- அலமிவென்றன், தூத்துக்குடி மாவட்டம்
- மகேந்திரன்
- சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகே பொம்மையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து. ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மகன் மகேந்திரன் (12), சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதால், நேற்று பள்ளிகள் இயங்கின. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மகேந்திரன், இடைவேளையில் மைதானத்தில் சக மாணவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஓடி வந்தவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான்.
The post அரசு பள்ளியில் மயங்கி விழுந்து 7ம் வகுப்பு மாணவன் சாவு appeared first on Dinakaran.