×

ஏற்காடு எல்லோ லேக் கிளப்பை மூடி சீல் வைக்க ஆணை

சென்னை: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள எல்லோ லேக் கிளப்பை மூடி சீல் வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம நாராயண சதீஷ் தொடர்ந்த வழக்கில் 2017-ல் இருந்து மஞ்சை குட்டை ஏரி அருகில் எல்லோ லேக் என்ற பெயரில் அனுமதியின்றி கிளப் இயங்கி வருகிறது. ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிளப்பை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் முன்பு விசாரணை வந்தது. அப்போது எல்லோ லேக் கிளப்புக்கு அனுமதி வழங்கவில்லை; மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

The post ஏற்காடு எல்லோ லேக் கிளப்பை மூடி சீல் வைக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Yellow Lake Club ,Chennai ,Chennai ICourt ,Salem district ,Salath ,Rama Narayana Satish ,Yellow Lake ,Manjaykuttai Lake ,Dinakaran ,
× RELATED ஆதார் விவரங்களை கேட்டு சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு தொந்தரவு!!