×

சாலைக்கிராமம் அருகே கண்மாயில் மீன்கள் இறந்து மிதப்பு மீன்வளத்துறையினர் ஆய்வு

இளையான்குடி, ஆக. 10: சாலைக்கிராமம் அருகே தெற்கு சமுத்திரம் கண்மாயில் குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரில் கெளுத்தி, கெண்டை, கெடத்தை என்ற தேள் கெளுத்தி ஆகிய மீன்கள் உள்ள நிலையில், நேற்று குறிப்பிட்ட கெடத்தை மீன்கள் மட்டும் இறந்து மிதந்துள்ளது. இதுகுறித்து விஏஓ கணேஷ் பிச்சை கொடுத்த தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் லோகநாதன் முன்னிலையில் தெற்கு சமுத்திரம் கண்மாயில் இறந்து மிதந்த மீன்களை மீன்வளத்துறை ஓவர்சீயர் கணேசன் ஆய்வு செய்தார். இதுகுறித்து கணேசன் கூறியதாவது: கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் லேசான மழை பெய்துள்ளது. அதனால் அதிக வெப்பம் காரணமாக இந்த கெடத்தை மீன்கள் இறந்திருக்கலாம். இது தடை செய்யப்பட்ட மீன் வகை, என்றார்.

The post சாலைக்கிராமம் அருகே கண்மாயில் மீன்கள் இறந்து மிதப்பு மீன்வளத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kanmail ,Saaligram ,Ilaiyankudi ,South Sea Kanmai ,Saaligramam ,
× RELATED தாமரைக்குளம் கண்மாயில் புதியவகை...