×

நீடாமங்கலம் அருகே பட்டாக்கத்தி வைத்திருந்தவர் கைது

நீடாமங்கலம், ஆக. 10: நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதி ஊராட்சி கற்கோவில் பகுதியில் நேற்று முன் தினம் இரவு நீடாமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தார். அப்போது அவர் முதுகு பகுதியில் பட்டாக்கத்தி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நீடாமங்கலம் அருகில் உள்ள ஆதனூர் சமத்துவத்தை சேர்ந்த கட்டை பிரபு (எ) அருண்குமார் (39) என்பதும் முன் விரோதம் காரணமாக சிலரை தாக்குவதற்காக பட்டாக்கத்தியை மறைத்து வைத்து காத்திருந்தது தெரியவந்தது. அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழுக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது இதனால் கட்டை பிரபுவை கைது செய்த நீடாமங்கலம் போலீசார் மன்னார்குடி சிறையில் அடைத்தனர்.

The post நீடாமங்கலம் அருகே பட்டாக்கத்தி வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Needamangalam ,Needamangalam Police ,Sub-Inspector ,Santosh Kumar ,Kuhamathi Panchayat ,
× RELATED பாசன வாய்க்கால்களையும் தூர்வார்வேண்டும்