- உடன் முதல்வர் திட்ட முகாம்
- எம்.எல்.ஏ சுந்தர்
- மதுராந்தகம்
- உத்தரமேரூர்
- முதல் அமைச்சர்
- ஆனம்பாக்கம் ஊராட்சி
- உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம்
- சாலவாக்கம்
- ஆனம்பாக்கம் ஊராட்சி
- முதலமைச்சர் திட்ட முகாம்
- தி.மு.க.
- குமார்...
- முதல்வர் திட்ட முகாம்
- தின மலர்
மதுராந்தகம்: ஆனம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் பங்கேற்றார். உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த ஆனம்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று காலை நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை விகித்தார். ஊராட்சி தலைவர் கோமளா ஐயப்பன் அனைவரையும் வரவேற்றார்.முகாமிற்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு பட்டா நகல் மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினார்.
தொடர்ந்து சுகாதாரத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அரசின் திட்டங்களுக்கான மனுக்களை வழங்கினர். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சந்திரா, அன்புராஜ், கல்யாண சுந்தரம், ஊராட்சி தலைவர்கள் கோதண்டராமன், சற்குண, பூங்கோதை, சுதா லட்சுமி திமுக நிர்வாகிகள் ரவி, ஞானசேகரன் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்எல்ஏ சுந்தர் பங்கேற்பு appeared first on Dinakaran.