×

மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு ஒற்றை செங்கல் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 1 பைசா நிதி இல்லை: மோடி அரசுக்கு பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காத மோடி அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த ஒரு பைசா கூட நிதி ஒதுக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் கைவிரித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

ரூ.63,246 கோடிகள் மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றும் மொத்த சுமையும் மாநில ஆட்சியின் மீதே சுமத்தப்படுவது அநீதி. கூட்டாட்சிக் கோட்பாட்டை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கை. ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்காக எடுக்கப்பட்ட நிலத்தில் வெற்றுச் செங்கல் நின்றுகொண்டு பல்லைக் காட்டுகிறது.

இப்போது மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கும் நிதியை மறுத்து மாநிலத்திடம் தள்ளி விடுவது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த அநீதியை தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்துவதுடன், இந்த போக்கிற்கு எதிரான சாத்தியமான அனைத்து வழிகளிலும் போராடிட ஜனநாயக சக்திகளை மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.

The post மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு ஒற்றை செங்கல் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 1 பைசா நிதி இல்லை: மோடி அரசுக்கு பாலகிருஷ்ணன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,AIIMS ,Balakrishnan ,Modi Govt ,Chennai ,K. Balakrishnan ,Modi government ,State Secretary ,Marxist Party ,
× RELATED மதுரை எய்ம்ஸ்சுக்கு மட்டும் எப்படி கோளாறு வருகிறது? எம்பி கேள்வி