×

ஆண்களுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வரலாம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சூசகம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று நடந்த தமிழ்ப்புதல்வன் திட்ட விழாவில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: முதல்வரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற திட்டங்கள் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

எந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும் மகளிருக்குத்தான் அதிகமாக திட்டம் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத்தொகை திட்டமும் பெண்களுக்கு தான் வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு வழங்கப்படவில்லையே என்ற ஏக்கம் உள்ளது. அந்த ஏக்கம் கூட எதிர்காலத்தில் தீர்த்து வைக்க கூடிய சூழ்நிலை வரும். இவ்வாறு கூறினார்.

The post ஆண்களுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வரலாம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சூசகம் appeared first on Dinakaran.

Tags : Minister KR. Peryakarapan Susakam. ,Minister ,K.R. Peryakarappan ,Minister KR. Peryakarapan Susagam ,
× RELATED முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும்...