- சட்டமன்ற உறுப்பினர்
- மீன்கூர் நகராட்சி
- ஆதி திராவிடர் நலப் பள்ளி
- பொன்னேரி
- Meenjur
- துரை சந்திரசேகர்
- ஆதி திராவிட நல மேல்நிலைப்பள்ளி
- 3 வது வார்டு
- தின மலர்
பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை எம்எல்ஏ துரை சந்திரசேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீஞ்சூர் பேரூராட்சி 3வது வார்டு பகுதியில் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, சுமார் 240 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஏற்றார்போல் வகுப்பறை பற்றாக்குறை இருந்து வந்தது. எனவே இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பேரூராட்சி நிர்வாகம் என ஒன்று சேர்ந்து கூடுதல் வகுப்பறை கட்டித் தரும்படி துரை சந்திரசேகர் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு வைத்தனர். இதனை ஏற்று கொண்ட எம்எல்ஏ அவரது முயற்சியில், தமிழ்நாடு அரசு மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி 80 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டது.
மேலும் அந்த பள்ளி வளாகத்திலேயே கூடுதல் வகுப்பறையை கட்ட கடந்த பிப்ரவரி மாதம் பூஜை போட்டு புதிய பள்ளி கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய பள்ளி கட்டிடத்தின் பணிகளை துரை சந்திரசேகர் எம்எல்ஏ நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணை தலைவர் அலேக்சாண்டர், திமுக பேரூர் செயலாளர் தமிழ்உதயன், மீஞ்சூர் கோதண்டம், கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகி கதிர்வேல், முன்னாள் திமுக நகர செயலாளர் மோகன்ராஜ், குரு சாலமன், அன்பரசு, குமார் மற்றும் காங்கிரஸ், திமுக கட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள பள்ளி சத்துணவு கூடத்திற்கு சென்ற எம்எல்ஏ துரை சந்திரசேகர் அங்கு பார்வையிட்டு குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவை சாப்பிட்டு ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.
The post மீஞ்சூர் பேரூராட்சி ஆதிதிராவிடர் நல பள்ளியில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டிலான கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.