- ஊத்துக்கோட்டை
- கிராம தெய்வம் செல்லியம்மன் கோவில்
- செல்லியம்மன் கோயில்
- Uthukkottai
- மேல் சிற்றப்பாக்கம்
- கீழ் சிற்றப்பாக்கம்
- அம்பேத்கர் நகர்…
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊத்துக்கோட்டை எல்லையில் கிராம தேவதையான செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஊத்துக்கோட்டை, மேல் சிட்ரபாக்கம், கீழ் சிட்ரபாக்கம், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து, பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும், குழந்தைகளுக்கு காது குத்தும் நிகழ்ச்சியும் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் முதல்நாளான நேற்றுமுன்தினம் காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜையும், முதல் கால யாகசாலை பூஜையும், அன்று மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி, அங்குரார்ப்பணம், இரண்டாம் கால யாகசாலை பூஜையும் இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணியளவில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், மூல மந்திர பூஜையும் நடந்தது.
பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று கோயிலை வலம் வந்து செல்லியம்மன் மற்றும் செஞ்சீஸ்வரர் ஆகிய சுவாமிகளின் கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, புளியோதரை, சுண்டல் வென்பொங்கல், சர்க்கரை பொங்கல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
The post ஊத்துக்கோட்டை கிராம தேவதை செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.