சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக வக்கீல் பால்கனகராஜிடம் சென்னை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வட சென்னையை ஆட்டிப்படைத்த ரவுடி நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ரவுடி திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரை முதலில் கைது செய்தனர். இதில் திருவேங்கடம் போலீஸ் கஸ்டடியில் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதன் பிறகு கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக வழக்கறிஞர் மலர்க்கொடி, அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், தமாகாவை சேர்ந்த ஹரிகரன் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் பிரமுகரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட அருளுடன் அஸ்வத்தாமன் பேசியதும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பந்தமாக அருள், அஸ்வத்தாமனிடம் தெரிவித்தபோது, ‘எனது தந்தையிடம் கூறிவிட்டு முடிவை சொல்கிறேன் என’ கூறியுள்ளார். அதன்படி தனது தந்தையிடம் கூறி விட்டு, ‘பசங்களை செய்ய சொல்லுங்கள்.. எல்லாம் நல்ல விதமாக முடிந்தால் பசங்க வெளியே வந்தவுடன் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை நான் செய்து தருகிறேன் என அருளிடம் அஸ்வத்தாமன் உறுதியளித்துள்ளார். அதனடிப்படையில் அருள், ஆட்களை தயார் செய்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அஸ்வத்தாமன் கொடுத்த தகவலின்பேரில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனையாக உள்ள அவரது தந்தை நாகேந்திரன் மீது செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை அஸ்வத்தாமனுடன் சேர்த்து 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 23 வது நபராக சிறையில் இருந்தவாறே
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னையை ஆட்டிப்படைத்த ரவுடி நாகேந்திரன் கைது: பாஜக வக்கீல் பால்கனகராஜிடம் போலீஸ் விசாரணை: அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு appeared first on Dinakaran.