அண்ணாநகர்: ஆடி மாதத்தில் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படும். கடந்த வாரம் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் அதிகளவில் இல்லாததால் அனைத்து பூக்களின் விலையும் சரிந்து காணப்பட்டது. இன்று 4வது வெள்ளியை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1000, மல்லி ரூ.800, ஐஸ் மல்லி ரூ.600, ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.500, அரளி ரூ.250, சாமந்தி ரூ.140, சம்பங்கி ரூ.150, சாக்லேட் ரோஸ் மற்றும் பன்னீர் ரோஸ் ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘கடந்த வாரம் முகூர்த்த நாள் மற்றும் விசேஷ நாட்கள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலையும் குறைந்து காணப்பட்டது. இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை அனைத்து பூக்களின் விலையும் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார். அதே போன்று கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் வரத்து உள்ளது. கடந்த 2 மாதங்களாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்தது. இன்று காலை வரத்து அதிகாரிப்பால் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது.
ஒரு கிலோ அவரைக்காய் காராமணி ரூ.60ல் இருந்து ரூ.40க்கும், சின்ன வெங்காயம் ரூ.70ல் இருந்து ரூ.65க்கும், சேனைக்கிழங்கு ரூ.75ல் இருந்து ரூ.65க்கும், பாவக்காய் ரூ.50 இருந்து ரூ.40க்கும், சேம கிழங்கு ரூ.50ல் இருந்து ரூ.40க்கும், காலிபிளவர் ரூ.50ல் இருந்து ரூ.30க்கும், நூக்கல் ரூ.50ல் இருந்து ரூ.35க்கும், தக்காளி ரூ.55ல் இருந்து ரூ.25க்கும், வெங்காயம் ரூ.40ல் இருந்து ரூ.25க்கும், கத்திரிக்காய் ரூ.40ல் இருந்து ரூ.30க்கும், பீர்க்காங்காய் ரூ.40ல் இருந்து ரூ.30க்கும், சவ்சவ் முள்ளங்கி ரூ.30ல் இருந்து ரூ.20க்கும், புடலங்காய் கோவைக்காய் ரூ.30ல் இருந்து ரூ.25க்கும், கொத்தவரங்காய் ரூ.30க்கும், பீன்ஸ் ரூ.150ல் இருந்து ரூ.50க்கும், கேரட் ரூ.150ல் இருந்து ரூ.100 க்கும், பீட்ருட் ரூ.50க்கும், உருளை கிழங்கு ரூ.45க்கும், காராமணி ரூ.40க்கும், சுரக்காய் ரூ.25க்கும், முருங்கைக்காய் ரூ.30க்கும், வெள்ளரிக்காய் ரூ.20க்கும், பச்சை மிளகாய் ரூ.60க்கும், பட்டாணி ரூ.200ல் இருந்து ரூ.140க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், கடந்த 2 மாதமாக வரத்து குறைவால் காய்களின் விலை அதிகமாக இருந்தது. இன்று காலை 700 வாகனங்களில் இருந்து 7,000 டன் காய்கறிகள் வந்துள்ளது. அதனால் விலை சற்று குறைந்துள்ளது. இம்மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை ஏறுவதும் இறங்குவதுமாகத்தான் இருக்கும்’ என்றார்.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை உயர்வு காய்கறி விலை குறைவு appeared first on Dinakaran.