×

வயநாடு நிலச்சரிவில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு சிறப்பு அதாலத் முகாம் தொடக்கம்..!!

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு சிறப்பு அதாலத் முகாம் தொடங்கப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் அனைவருக்கும் ஆவணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் முகாம்கள் மூலம் ஆவணங்களைப் பெற முடியும். வயநாடு நிலச்சரிவில் இருந்து தப்பி காணாமல் போன 131 பேரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. நிலச்சரிவில் காணாமல் போனவர்கள் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் தேடப்படுகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்டு 11 ஆவது நாளான இன்று தொழில்நுட்ப உபதவியுடன் உடல்கள் தேடப்பட்டு வருகின்றன.

The post வயநாடு நிலச்சரிவில் ஆவணங்களை இழந்தவர்களுக்கு சிறப்பு அதாலத் முகாம் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Special Athan Camp ,Wayanadu landslide ,Thiruvananthapuram ,Special Atalat Camp ,Special Atalat ,
× RELATED திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன்