×
Saravana Stores

வயநாடு அருகே நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு அருகே அம்புகுத்தி பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிச்சியார்மலை, பிணங்கோடு, அம்புகுத்திமலை, எடக்கல் குகை பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து குடியிருப்பு வாசிகள் வெளியேறவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பயங்கர அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் கூறியதை தொடர்ந்து புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் கூறப்படுகிறது. நில அதிர்வு உணரப்பட்டதை தொடர்ந்து அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post வயநாடு அருகே நிலநடுக்கம்: மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Earthquake ,Wayanad ,Wayanadu ,Ambuktu Valley ,Wayanad, Kerala ,Warchiyarmala ,Pinangodu ,Ambukuthimalai ,Wethakal Cave ,Dinakaran ,
× RELATED வயநாடு மிகவும் பாதுகாப்பான, அழகான...