×

மதுபாட்டில்கள் பதுக்கியவர்கள் கைது

 

போடி, ஆக. 9: தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலைய எஸ்.ஐ. கிருஷ்ணவேணி அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். பெரியாண்டவர் ஹைரோடு முனிசிபல் காலனி மீன் மார்க்கெட் பகுதியில் கண்காணித்தபோது காளிமுத்து(27) என்பவர் விதிமீறி மது பாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா(38), போடி உருமிக்காரன் தெருவை சேர்ந்த நாகராஜ்(25) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.500 ரொக்கம் மற்றும் 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மதுபாட்டில்கள் பதுக்கியவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Bodi ,Theni ,District Bodi Nagar Police Station SI ,Krishnaveni ,Kalimuthu ,Periyandavar High Road Municipal Colony ,Dinakaran ,
× RELATED இளம்பெண் மாயம்