உத்தமபாளையம், ஆக. 9: தேனி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வைரஸ் நச்சுயிரியால் ஏற்படும் அம்மை வகையைச் சார்ந்த இலம்பி நோய் எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா, உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் கோயில்ராஜா, கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் சிவரத்தினா, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் பாஸ்கரன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் ராயப்பன்பட்டி கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் அகமது முக்தார், தலைமையிலான குழுவினர் ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, ஆனைமலையன்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போட உள்ளனர். முதற்கட்டமாக அணைப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 100க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
The post மாடுகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசி appeared first on Dinakaran.