×

அரியலூர் மாவட்டத்தில் தாய், தந்தை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி கலெக்டர் வழங்கினார்

அரியலூர், ஆக. 9: தாய், தந்தை இழந்த குழந்தைகளுக்கு கலெக்டர் நிதி உதவி வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மிஷன் வாட்சாலயா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, நிதி உதவிகளை வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் தாய், தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பதிக்கப்பட்ட 200 குழந்தைகளின் படிப்பு மற்றும் மருத்துவத்தேவைக்காக மாதம் ரூ.4000 வீதம் அக்டோபர் 2023 முதல் மார்ச் 2024 வரை 6 மாதங்களுக்கு குழந்தைகளின் திட்டகாலத்திற்கு ஏற்ப மொத்த கூடுதல் தொகை ரூ.47,76,000 வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தாய், தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பதிக்கப்பட்ட 57 குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாதம் ரூ.2000 வீதம் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை 12 மாதங்களுக்கு குழந்தைகளின் திட்டகாலத்திற்கு ஏற்ப மொத்த கூடுதல் தொகை ரூ.12,88,000 வழங்கப்பட்டது. வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 2 குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாதம் ரூ.4000 வீதம் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை கணக்கிட்டு 12 மாதங்களுக்கு மொத்த கூடுதல் தொகை ரூ.96,000 மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் மாவட்டத்தில் தாய், தந்தை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,Ariyalur District Collectorate ,Mission ,Ariyalur District Child Protection Unit ,
× RELATED அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம்