×

சீர்காழி அருகே திருவெண்காட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட முகாம்

சீர்காழி, ஆக.9: சீர்காழி அருகே திருவெண்காட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட முகாம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு ஊராட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட முகாம் நடைபெற்றது.

ஊராட்சி தலைவர் சுகந்தி நடராஜன் தலைமையில் நடைபெற்ற முகாமில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் செல்வி, கார்த்திகா, உமாமகேஸ்வரி, ஜெனி குமாரி, கலந்துகொண்டு மத்திய அரசின் ஆயுஷ்மான், பாரத் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் பயனாளிகளை மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் கார்த்திக் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் செய்திருந்தனர்.

The post சீர்காழி அருகே திருவெண்காட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Comprehensive Medical Insurance Scheme ,Tiruvenkat ,Sirkazhi ,Comprehensive Medical Insurance Program ,Camp ,Thiruvengat ,Thiruvengadu panchayat ,Sirkazhi, Mayiladuthurai district ,Panchayat ,President ,Sukanti Natarajan ,
× RELATED மணிப்பூர்; முன்னாள் முதலமைச்சர்...