×

கோவை எஸ்பி ஆக கார்த்திகேயன் நியமனம்

கோவை, ஆக.9: கோவை மாவட்ட எஸ்பி ஆக பத்ரி நாராயணன் பணியாற்றி வந்தார். இவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி வந்த கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை எஸ்பி பத்ரி நாராயணனுக்கு புதிய பணியிடம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டாக கோவையில் சிறப்பாக பணியாற்றிய பத்ரி நாராயணன், கஞ்சா ஒழிப்பு, செல்போன் மீட்பில் தீவிரம் காட்டினார். கோவை மாவட்டத்தில் அதிகளவு கஞ்சா குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்தார். மேலும் தொல்லைந்து போன 2300 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து பாராட்டு பெற்றார். பல்வேறு பகுதியில் குற்றங்கள் தடுக்க தீவிரம் காட்டி வந்தார்.

The post கோவை எஸ்பி ஆக கார்த்திகேயன் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Karthikeyan ,Coimbatore SP ,Coimbatore ,Badri Narayanan ,Coimbatore District SP ,Tiruvannamalai District SP ,Dinakaran ,
× RELATED தமிழகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு...