×

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

டோக்கியோ: ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் அதிகமாக நிலநடுக்கம் ஏற்படும். ஜப்பானில் உள்ள வீடுகளும் இதற்கு ஏற்றவாறு கட்டப்பட்டுள்ளது.இதனால் பெரிய பாதிப்புகளில் இருந்து தடுக்கப்படுகிறது. ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் நேற்று அடுத்தடுத்து இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், பின்னர் 7.1 என்ற ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் மியாசாகி கடற்கரையிலிருந்து 20 மைல் தொலைவில் கியூஷுவில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். ஆனால் பெரிய அளவில் பாதிப்பு குறித்து தகவல் இல்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஜப்பானிய மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

The post ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : in ,Japan ,Tokyo ,southern island region of ,South of Japan ,Dinakaran ,
× RELATED ஜப்பான் நாட்டை சேர்ந்தவரின் வினோத...