×
Saravana Stores

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு பணிகள் தீவிரம் பக்தர்கள் 1 லட்சம் பேர் பங்கேற்பர்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில், பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு மற்றும் 11 செயற்பாட்டு குழுக்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநாட்டு பணிகள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து 131 முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழ்நாட்டை தவிர இதர மாநிலங்களிலிருந்து 526 முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருகப் பக்தர்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இம்மாநாட்டில் தமிழ் கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள் பெயர்களில் வழங்கப்படும் விருதுக்கு 65 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கென அமைக்கப்பட்ட குழு விண்ணப்பங்களை பரிசீலித்து விருதாளர்களை தேர்வு செய்யும். இம்மாநாட்டில் வெளிநாட்டை சேர்ந்த 39 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்கள். மேலும், மலேசியாவிலிருந்து 35 நபர்களும், ஜப்பானிலிருந்து 70 நபர்களும், சுவிட்சர்லாந்திலிருந்து 15 நபர்களும் குழுக்காக தங்களது சொந்த செலவில் மாநாட்டில் பங்கேற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பழனியில் நடைபெறும் மாநாட்டிற்காக 10,000 நபர்கள் அமரும் வகையில் மாநாட்டு பந்தலும், மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருகப் பக்தர்களுக்காக 15 இடங்களில் உணவருந்தும் கூடங்களும், அறுபடை வீடுகளின் அரங்குகள், சிறப்பு புகைப்பட கண்காட்சி, வேல் அரங்கம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் போன்றவையும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பு பணியில் 1,200 காவல் துறையினர் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுவதோடு, விபத்து மற்றும் அவசர உதவிகளுக்கு போதிய தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், அரசு மருத்துவக் குழு, அப்பல்லோ, ராமச்சந்திரா மற்றும் காவேரி மருத்துவமனைகளின் சிறப்புக் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டிற்கு 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பாக்கிறோம். இம்மாநாட்டிற்காக ரூ.1.10 கோடி நன்கொடையாக வழங்கிட உபயதாரர்கள் விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு பணிகள் தீவிரம் பக்தர்கள் 1 லட்சம் பேர் பங்கேற்பர்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : International Muthamij Murugan Conference ,Minister ,Shekharbabu ,CHENNAI ,International Muthamil Murugan Conference Coordination Committee ,Working Committees ,Palani ,Hindu Religious Endowments Commissioner ,Nungambakkam, Chennai ,International Muthamil Murugan Conference ,Dinakaran ,
× RELATED அனைத்து அடிப்படை வசதிகளுடன் ராயபுரம்...